காலச்சுவடு பதிப்பகம் - Kalachuvadu Publications

சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை

சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை
ஆசிரியர்: அம்பை
பதிப்பாளர்: காலச்சுவடு பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 19
ஆண்டு: July 2024
பக்கங்கள்: 168
எடை: 190 கிராம்
அட்டை: Paper Back
வகைப்பாடு: சிறுகதை
ISBN: 978-93-8863-114-3

இருப்பு உள்ளது

விலை: ரூ. 195.00
தள்ளுபடி விலை: ரூ. 175.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: அம்பையின் ஏழாவது சிறுகதைத் தொகுப்பு இது. பதிமூன்று கதைகள் கொண்ட இத்தொகுப்பின் பல கதைகள் பிரசுரம் ஆகாதவை. அம்பை (பி. 1944) இயற்பெயர் டாக்டர் சி.எஸ். லக்ஷ்மி. வரலாற்றாசிரியர்; புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். நாற்பது ஆண்டுகளாகப் பெண்கள் வரலாறு, வாழ்க்கை பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருப்பவர். பெண் எழுத்தாளர்கள், பெண் இசைக் கலைஞர்கள், பெண் நடனக் கலைஞர்கள் குறித்து இவர் மேற்கொண்ட ஆய்வுகள் ‘The Face Behind the Mask’, ‘The Singer and the Song’, ‘Mirrors and Gestures’ என்னும் புத்தகங்களாக வெளிவந்துள்ளன. சிறுகதைத் தொகுதிகள் ‘சிறகுகள் முறியும்’ (1976), ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ (1988), ‘காட்டில் ஒரு மான்’ (2000), ‘வற்றும் ஏரியின் மீன்கள்’ (2007), ‘ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு’ (2013), அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு (2014). இவரின் கதைகள் ஆங்கிலத்தில் ‘A Purple Sea’, ‘In a Forest, A Deer’, ‘Fish in a Dwindling Lake’, A Night With a Black Spider, A Meeting On the Andheri Over Bridge என ஐந்து தொகுதிகளாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இரோம் ஷர்மிலாவின் ‘Fragrance of Peace’ கவிதைத் தொகுப்பைத் தமிழில் ‘அமைதியின் நறுமணம்’ (2010) என மொழிபெயர்த்திருக்கிறார். விளக்கு அமைப்பின் புதுமைப்பித்தன் விருது (2005), டொரான்டோ பல்கலைக்கழக தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வாழ்நாள் இலக்கிய விருது (2008), தமிழக அரசின் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி (2011), சென்னைப் பல்கலைக்கழகத்தின் இலக்கியத்தில் உன்னதத்திற்கான விருது (2011) முதலானவற்றைப் பெற்றிருக்கிறார். SPARROW (Sound & Picture Archives for Research on Women) என்னும் பெண்கள் ஆவணக் காப்பகத்தை மும்பையில் 1988இல் நிறுவி அதன் இயக்குநராகச் செயல்பட்டுவருகிறார்.

Qty:   

நேரடியாக வாங்க : +91-70103 86844

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.