காலச்சுவடு பதிப்பகம் - Kalachuvadu Publications

நளபாகம்

நளபாகம்
ஆசிரியர்: தி. ஜானகிராமன்
பதிப்பாளர்: காலச்சுவடு பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 10
ஆண்டு: July 2024
பக்கங்கள்: 320
எடை: 320 கிராம்
அட்டை: Paper Back
வகைப்பாடு: புதினம் (நாவல்)
ISBN: 978-93-5244-064-1

இருப்பு உள்ளது

விலை: ரூ. 390.00
தள்ளுபடி விலை: ரூ. 350.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: தி. ஜானகிராமன் ‘கணையாழி’ இதழில் தொடராக எழுதி, அவரது மறைவுக்குப் பின்னர் நூல் வடிவம் பெற்ற நாவல் ‘நளபாகம்.’ அவரது நாவல்களில் மையப்பொருளை அவ்வளவு வெளிப்படையாக உணர்த்தாத நாவலும் இதுவே. இந்தப் பூடகமே நாவலை இன்றும் சுவாரசியமான வாசிப்புக்கு உரியதாக நிலைநிறுத்துகிறது. சுவீகாரப் பிள்ளைகள் வாயிலாகவே தொடரும் தனது குடும்ப பாரம்பரியத்தை ரத்த உறவு மூலம் வலுப்படுத்த ரங்கமணி மேற்கொள்ளும் அபாயகரமான செயலே நாவலின் மையம். மகன் துரை மூலம் மகப்பேறு வாய்க்காத மருமகள் பங்கஜத்துக்குத் துணையாக காமேச்வரனை அழைத்துவந்து வீட்டில் தங்கவைக்கிறாள். அம்பாள் உபாசகனான அவனது வருகைக்குப் பின் மருமகள் கருத்தரிக்கிறாள். அந்த அற்புதம் நிகழ்ந்தது காமேச்வரனின் பூஜையாலா? அவனது இருப்பு தம்பதியரிடையே கூட்டிய அன்னியோன்னியத்தாலா? இந்த மர்மத்தைத் தனக்கு ஆகிவந்த பின்புலத்தில், அறியவந்த மனிதர்களின் சாயலில் வசீகர மொழியில் சொல்கிறார் தி.ஜா. பச்சாதாபம், காமம், ஆன்மீகம் ஆகிய மூன்றின் கலவையான வண்ணத்தில் மிளிர்கிறது இந்தப் படைப்பு

Qty:   

நேரடியாக வாங்க : +91-70103 86844

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.